Primary tabs


அதனின் ஊங்குப் பெறுதற்கு
அரியது இன்மையின், ''பெற்றானை''
என்றார். ''அது பெறாதன'' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும்
உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும்
உடைமையின் ''தொழும்'' என்றார். கூற்றம் குதித்தலும் கைகூடும்
நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. கூற்றத்தைக் கடத்தலும்
உண்டாவதாம், தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம்
தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக
உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு
பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.
இலர்பலர்
ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
உலகத்துச்
செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்,
தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். செல்வம் நல்குரவு
என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து
நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் நாலடி.251 என்றார் ஆகலின்.
''நோற்பார் சிலர''் எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து
உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை
என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது. அஃதாவது, தாம் விட்ட
காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும்
விரும்புமாறு தோன்ற,
அவ்வாறே கொண்டு
நின்று தவத்தோடு பொருந்தாததாய
தீய
ஒழுக்கம். அது விலக்குதற்கு, இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே
நகும். வஞ்சம் பொருந்திய

