Primary tabs


மனத்தை உடையவனது
மறைந்த ஒழுக்கத்தை; உடம்பாய்
அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள்
ஐந்தும் கண்டு தம்முள்ளே
நகும். காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது
இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும்,
அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு
ஒழுக்கத்தைப் ''படிற்று
ஒழுக்கம்'' என்றும்
உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல்
செய்வனவற்றிற்கு
ஐம்பெரும் பூதங்கள்
சான்றாகலின்,
அவ்வொழுக்கத்தையும்
அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து,
அவனறியாமல்
தம்முள்ளே நகுதலின், ''அகத்தே நகும்''
என்றும்
கூறினார். செய்த குற்றம்
மறையாது ஆகலின், அவ்வொழுக்கம்
ஆகாது
என்பது கருத்து. வானுயர் தோற்றம் எவன்செய்யும்
தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின். ஒருவனுக்கு வான் போல
உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும;் தான் குற்றம் என்று
அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ''வான் உயர்
தோற்றம்'' என்பது ''வான் தோய்குடி'' நாலடி 142 என்றாற்போல
இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச்
செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்;
விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே
அல்லது வேறு பயன் இல்லை என்பதாம். வலிஇல் நிலைமையான்
வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான்
வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பசு
''காவலர் கடியாமல்'' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை
மேய்ந்தாற் போலும்.
இல்பொருள் உவமை. ''வலிஇல் நிலைமையான்''
என்ற
அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில்
உவமையானும்.

