தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   95


வல்  உருவத்தோடு   மனவழிப்படுதல்   என்பது  பெற்றாம். காவலர்
கடியாமை  ''புலி புல் தின்னாது'' என்பதனாலும்  அச்சத்தானும் ஆம்.
ஆகவே,  வல்உருவங்  கோடற்குப்  பயன்  அன்ன  காரணங்களான்
உலகத்தார்  அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும்
துறந்து  வலியும்  இன்றிப்  பிறர்  அயிராத  வல்உருவமுங் கொண்டு
நின்றவன்   மனவழிப்படுதலாவது,   தன்   மனம்   ஓடிய   வழியே
ஓடிமறைந்து  பிறர்க்கு  உரிய  மகளிரை  விழைதலாம். அவ்வாறாதல்,
பெற்றம்   தனக்கு  உரிய  புல்லைவிட்டுப்  பிறர்க்குரிய  பைங்கூழை
மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக. தவமறைந்து அல்லவை
செய்தல்  புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.  அவ் வலிஇல்
நிலைமையான்     தவவேடத்தின்கண்ணே     மறைந்து     நின்று
தவமல்லவற்றைச்  செய்தல்,  வேட்டுவன்  புதலின் கண்ணே மறைந்து
நின்று  புட்களைப்   பிணித்தாற்போலும்,  ''தவம்'' ஆகுபெயர். தவம்
அல்லவற்றைச்    செய்தலாவது,    பிறர்க்கு    உரிய    மகளிரைத்
தன்வயத்தாக்குதல்,   இதுவும்   இத்தொழில்   உவமையான்  அறிக.
பற்றற்றேம்  என்பார்  படிற்றொழுக்கம்  எற்றெற்றென் றேதம் பலவுந்
தரும்.  தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம்
என்று  சொல்வாரது  மறைந்த  ஒழுக்கம், அப்பொழுது இனிதுபோலத்
தோன்றும்   ஆயினும்,   பின்   என்   செய்தோம்  என்று  தாமே
இரங்கும்வகை,  அவர்க்குப்  பல துன்பங்களையும் கொடுக்கும். சொல்
அளவல்லது பற்று அறாமையின் பற்று அற்றேம் என்பார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)