Primary tabs


என்றும், சிறிதாய்க்
கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின்
பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார்,
அதன் விளைவின் கண் ''அந்தோ வினையே என்றழுவர்''
சீவக.முத்தி,27 ஆகலின் ''எற்று எற்று'' என்னும் கூறினார். இவை
ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார்
இல். நெஞ்சால் பற்று அறாது வைத்து, பற்று அற்றார் போன்று தானம்
செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் -
வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. தானம் செய்வாரை
வஞ்சித்தலாவது, ''யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு
இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்'' என்று அறியாது ஈந்தாரை,
அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். ''அடங்கலர்க்கு ஈந்த தானப்
பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள
அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி
வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல்
மன்னர் ஏறே''
சீவக. முத்தி - 244 என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு
ஆகாதன விளைத்தலின் ''வன்கணார் இல்'' என்றார். புறங்குன்றி
கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.
குன்றியின் புறம் போல வேடத்தாற்
செம்மையுடையராயினும், அதன்
மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்
''குன்றி'' ஆகுபெயர். செம்மை கருமை என்பன
பொருள்களின்
நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும்
சென்றன.
ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின்
மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. திருக்கோவை 322
என்பதும் அது. மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். மாசு தம்

