தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   97


மனத்தின்  கண்ணதாகப்  பிறர்க்குத்   தவத்தான்  மாட்சிமையுயராய்
நீரின்  மூழ்கிக்  காட்டி,  மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
மாசு:  காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார்
என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு
இடனாக்கினார்.     இனி     ''மாண்டார்     நீராடி''    என்பதற்கு
''மாட்சிமைப்பட்டாரது  நீர்மையை  உடையராய்''  என உரைப்பாரும்
உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும்,
அவரை   அறிந்து   நீக்கல்   வேண்டும்   என்பதும்  கூறப்பட்டன.
கணைகொடிது  யாழ்கோடு  செவ்விதாங்  கன்ன  வினைபடு  பாலால்
கொளல்.  அம்பு  வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ்
கோட்டால்   வளைந்ததாயினும்  செயலால்  செவ்விது. அவ்வகையே
தவம்   செய்வோரையும்   கொடியர்  செவ்வியர்  என்பது  வடிவால்
கொள்ளாது    அவர்செயல்பட்ட    கூற்றானே   அறிந்து  கொள்க.
கணைக்குச்செயல்  கொலை,  யாழுக்குச்  செயல்  இசையால் இன்பம்
பயத்தல்.   அவ்வகையே  செயல்  பாவமாயின்  கொடியர்  எனவும்,
அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை
அறியும்  ஆறு  கூறப்பட்டது. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த   தொழித்து  விடின்.  தவம்  செய்வோர்க்கு  தலை  மயிரை
மழித்தலும்  சடையாக்கலும்  ஆகிய வேடமும் வேண்டா. உயர்ந்தோர்
தவத்திற்கு  ஆகாது  என்று  குற்றம்  கூறிய  ஒழுக்கத்தைக்  கடிந்து
விடின்.   பறித்தலும்   மழித்தலுள்  அடங்கும்,  மழித்தல்  என்பதே
தலைமயிரை  உணர்த்தலின்  அது  கூறார் ஆயினார். இதனால் கூடா
ஒழுக்கம்  இல்லாதார்க்கு  வேடமும்  வேண்டா என அவரது சிறப்புக்
கூறப்பட்டது.   அஃதாவது,   பிறர்  உடைமையாயிருப்பது  யாதொரு
பொருளையும் அவரை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)