Primary tabs


பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும்
மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும்,
தீங்கு
பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை'' எனவும்
அவற்றது
இலக்கணம் கூறப்பட்டது. தன்னெஞ் சறிவது பொய்யற்க
பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஒருவன் தன் நெஞ்சு அறிவது
ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக, பொய்த்த
தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே
அப்பாவத்திற்குக் கரியாய்
நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
நெஞ்சு
கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது
தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு
அறிந்த
கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி
இல்லை ஆகலின்" கலித்.நெய்தல்.8 என்பதனானும் அறிக.
பொய்
மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான்
கூறப்பட்டது.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம்
உளன். ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது
ஒழுகுவானாயின், அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம்
உளனாம். ''உள்ளத்தால்''் என்பது வேற்றுமை மயக்கம். பொய்
கூறாது
ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது
அருமை
நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர்
என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.
மனத்தொடு
வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. ஒருவன்
தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், அவன்
தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும்
சிறப்புடையன். மனத்தொடு
பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய
மெய்

