தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   110


நிகழும்     என்பது    அறிவித்தற்கு,   இது   வெகுளாமையின்பின்
வைக்கப்பட்டது.   சிறப்பீனும்   செல்வம்   பெறினும்  பிறர்க்கின்னா
செய்யாமை  மாசற்றார்  கோள்.  யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா
முதலிய  செல்வங்களைப்  பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்;
அதனைச்  செய்யாமை  ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது
துணிவு.  உம்மை  பெறாமைமேற்று.  சிறப்பு  உடையதனைச்  சிறப்பு
என்றும்,  அதன்  பயிற்சியான்  வாயுவை  வென்று  எய்தப்படுதலின்
எட்டுச்  சித்திகளையும்  சிறப்பு  ஈனும்  செல்வம்  என்றும்,   காமம்
வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான்  ''மாசு  அற்றார்''்
என்றும்  கூறினார்.  இதனான்  தமக்கொரு  பயன் நோக்கிச் செய்தல்
விலக்கப்பட்டது.   கறுத்தின்னா  செய்தவக்  கண்ணும்  மறுத்தின்னா
செய்யாமை  மாசற்றார்  கோள்.  தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன்
இன்னாதவற்றைச்    செய்த    இடத்தும்.   மீண்டுதாம்   அவனுக்கு
இன்னாதவற்றைச்  செய்யாமையும்  அவரது துணிவு. இறந்தது தழீஇய
எச்ச   உம்மை   விகாரத்தால்   தொக்கது.   அவ்  இன்னாதவற்றை
உட்கொள்ளாது   விடுதல்   செயற்பாலது   என்பதாம்.   செய்யாமல்
செற்றார்க்கும்  இன்னாத  செய்தபின்  உய்யா  விழுமம் தரும்.  தான்
முன்பு   ஓர்   இன்னாமை   செய்யாதிருக்கத்   தன்மேல்   செற்றம்
கொண்டவர்க்கும்   இன்னாதவற்றைத்   துறந்தவன்    செய்யுமாயின்;
அச்செயல்  அவனுக்குக்  கடக்க முடியாத இடும்பையைக்  கொடுக்கும்.
அவ்விடும்பையாவது   தவம்  இழந்து  பழியும்  பாவமும்   எய்துதல்.
இன்னாசெய்  தாரை  ஒறுத்தல்  அவர்நாண நன்னயம் செய்து  விடல்.
தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:  அவர்
தாமே நாணுமாறு அவர்க்கு
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)