தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   111


இனிய   உவகைகளைச்   செய்து    அவ்விரண்டனையும்   மறத்தல்.
மறவாவழிப்  பின்னும்  வந்து   கிளைக்கும்  ஆகலின்,  மறக்கற்பால
ஆயின.  அவரை  வெல்லும்   உபாயம்  கூறியவாறு.  இவை மூன்று
பாட்டானும்  செற்றம்  பற்றிச்  செய்தல் விலக்கப்பட்டது. அறிவினான்
ஆகுவ  துண்டோ  பிறிதின்நோய்  தம்நோய்போல்  போற்றாக் கடை.
துறந்தார்க்கு   உயிர்   முதலியவற்றை  உள்ளவாறறிந்த  அறிவினான்
ஆவதொரு    பயன்    உண்டோ,   பிறிதோர்   உயிர்க்கு   வரும்
இன்னாதவற்றைத்  தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா
இடத்து?  குறிக்கொண்டு  காத்தலாவது:  நடத்தல்,  இருத்தல், நிற்றல்,
உண்டல்  முதலிய  தம்  தொழில்களானும்,  பிறவாற்றானும் உயிர்கள்
உறுவனவற்றை    முன்னே    அறிந்து   உறாமல்   காத்தல்.  இது
பெரும்பான்மையும்     அஃறிணைக்கண்     நுண்ணிய     உடம்பு
உடையவற்றைப்  பற்றி  வருதலின்  பொதுப்படப்  ''பிறிதின்  நோய்''
என்றும்,  ''மறப்பான்  அது துன்புறினும் நமக்கு இன்னா  செய்தலாம''்
என்று  அறிந்து  காத்தல்  வேண்டும்  ஆகலின்,  அது ''செய்யாவழி
அறிவினான்   ஆகுவது   உண்டோ''  என்றும்  கூறினார்.  இதனால்
சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.  இன்னா எனத்தான் உணர்ந்தவை
துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். இவை மக்கட்கு இன்னாதன
என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன் மாட்டுச் செய்தலை
மேவாமை  துறந்தவனுக்கு வேண்டும். இன்பதுன்பங்கள் உயிர்க்குணம்
ஆகலின்,   அவை  காட்சி  அளவையான்  அறியப்படாமை  அறிக.
அறமும்   பாவமும்   உளவாவது  மனம்  உளனாயவழி  ஆகலான்,
''உணர்ந்தவை''  என்றார்.  எனைத்தானும்  எஞ்ஞான்றும்  யார்க்கும்
மனத்தானாம்  மாணாசெய்  யாமை  தலை. மனத்தோடு உளவாகினற்
இன்னாத   செயல்களை;  எஎக்காலத்தும்  யாவர்க்கும்  சிறிதாயினும்
செய்யாமை தலையாய அறம்.
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)