தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   112


ஈண்டு  மனத்தான்   ஆகாத   வழிப்   பாவம்   இல்லை  என்பது
பெற்றாம்.  ஆற்றலுண்டாய  காலத்தும் ஆகாமையின். ''எஞ்ஞான்றும''்
என்றும்  எளியார்க்கும் ஆகாமையின், ''யார்க்கும''்  என்றும்,  செயல்
சிறிதாயினும்   பாவம்   பெரிதாகலின்,   ''எனைத்தானும்''   என்றும்
கூறினார்.    தன்உயிர்க்   கின்னாமை   தானறிவான்  என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். பிறர் செய்யும் இன்னாதன  தன்னுயிர்க்கு
இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: நிலைபேறுடைய
பிற  உயிர்கட்குத்  தான்  அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
இவ்வாறே  இவை  பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான்
அறிந்து        வைத்துச்           செய்கின்ற        இப்பாவம்
கழுவப்படாமையின், ''இன்னாதான் யான்  வருந்தப்  பின்னே  வந்து
வருத்தும''்  என்பது  ஆகமத்தானும்  அறிந்து ஒழியற்பாலன என்பது
தோன்றத் ''தான''் என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம்
மயக்கம்  என்பது  தோன்ற ''என்கொலோ'' என்றும் கூறினார். இவை
மூன்று  பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது. பிறர்க்கின்னா
முற்பகல்  செய்யின்  தமக்கின்னா  பிற்பகல் தாமே வரும். துறந்தவர்
பிறர்க்கு    இன்னாதனவற்றை    ஒரு    பகலது   முற்கூற்றின்கண்
செய்வராயின்,  தமக்கு  இன்னாதன  அதன்  பிற்கூற்றின்கண் அவர்
செய்யாமல்  தாமே  வரும்.  ''முற்பகல''்,  ''பிற்பகல்''  என்பன  பின்
முன்னாகத்  தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின்,
அங்ஙனம்  கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க
என்பதாம்.  இனி  ''தானே  வரும்''  என்பது பாடமாயின் அச்செயல்
தானே  தமக்கு  இன்னாதனவாய்  வரும்  என  உபசார வழக்காக்கி,
ஆக்கம் வருவித்து உரைக்க. நோயெல்லாம் நோய்செய்தார்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)