Primary tabs


மேலவாம் நோய்செய்யார் நோயின்மை
வேண்டு பவர். இன்னாதன
எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்,
அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு
இன்னாதன செய்யார். ''உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு
விளைவும் ''அதுவே'', சீவக. முத்தி 164 ஆகலின், நோய் எல்லாம்
நோய் செய்தார் மேலவாம்'' என்றார். இது சொற்பொருள்
பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும்
தீங்கு கூறப்பட்டது. அஃதாவது,ஐயறிவு உடையன முதல் ஓர்
அறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்தும் கொல்லுதலைச்
செய்யாமை,
இதுமேற்கூறிய அறங்கள்
எல்லாவற்றினும்
சிறப்புடைத்தாய்க்கூறாத
அறங்களையும் அகப்படுத்து நிற்றலின்,
இறுதிக்கண்வைக்கப்பட்டது.
அறவினை யாதெனில்
கொல்லாமை
கோறல் பிறவினை எல்லாம் தரும். அறங்களெல்லாம் ஆகிய செய்கை
யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்,
அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே
தரும் ஆதலான். அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும்
அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார்.
ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம்
விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க
மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின்
பயனையும் தரும்
என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை
முகத்தால்
கூறியவாறாயிற்று. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
உண்பதனைப் பசித்த உயிர்கட்குப்
பகுத்துக்

