தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   114


கொடுத்து  உண்டு  ஐவகை   உயிர்களையும்   ஓம்புதல்,  அறநூலை
உடையார்   துறந்தார்க்குத்   தொகுத்த   அறங்கள்  எல்லாவற்றினும்
தலையாய அறம். ''பல்லுயிரும்''் என்னும் முற்று உம்மை   விகாரத்தால்
தொக்கது.  ஓம்புதல்:  சோர்ந்தும்  கொலை  வாராமல் குறிக்கொண்டு
காத்தல்.  அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின்
அச்சிறப்புத்   தோன்ற   அதனை   இறந்தகால   வினையெச்சத்தால்
கூறினார்.   எல்லா   நூல்களிலும்   நல்லன  எடுத்து  எல்லார்க்கும்
பொதுபடக்  கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட
''நூலோர்''்  என்றும்  அவர்  எல்லார்க்கும்  ஒப்ப  முடிதலான்  ''இது
தலையாய  அறம்''  என்றும்  கூறினார். ஒன்றாக நல்லது கொல்லாமை
மற்றதன்   பின்சாரப்   பொய்யாமை   நன்று.   நூலோர்  தொகுத்த
அறங்களுள்  தன்னோடு  இணையொப்பதின்றித்  தானேயாக  நல்லது
கொல்லாமை;  அஃது  ஒழிந்தால்  பொய்யாமை அதன் பின்னே நிற்க
நன்று.  ''''நூலோர்  தொகுத்த  அறங்களுள்'' என்பது  அதிகாரத்தான்
வந்தது.   அதிகாரம்   கொல்லாமையாயினும்,   மேல்   பொய்யாமை
பொய்யாமை   ஆற்றின்   எனவும்,  யாம்  மெய்யாக்  கண்டவற்றுள்
இல்லை  எனவும்  கூறினார்  ஆகலின்  இரண்டு அறத்துள்ளும் யாது
சிறந்தது  என்று  ஐயம்  நிகழுமன்றே; அது  நிகழாமையாற்பொருட்டு,
ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில்
பின்  கூறியது  வலியுடைத்து  ஆகலின்,  அதனைப்  பின்சார நன்று
என்றது,   நன்மை   பயக்கும்வழிப்  பொய்யும்  மெய்யாயும்,  தீமை
பயக்கும்வழி    மெய்யும்   பொய்யாயும்   இதனைப்   பற்ற   அது
திரிந்துவருதலான்   என   உணர்க.   இவை   மூன்று  பாட்டானும்,
இவ்வறத்தினது    சிறப்புக்    கூறப்பட்டது.   நல்லா   றெனப்படுவ
தியாதெனின்  யாதொன்றும்  கொல்லாமை சூழும் நெறி. மேற்கதி வீடு
பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வின
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)