Primary tabs


வின், அஃது யாதோர்
உயிரையும் கொல்லாமை ஆகிய
அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ''யாது
ஒன்றும்'' என்றது,
ஓரறிவுயிரையும்
அகப்படுத்தற்கு. காத்தல்:
வழுவாமல் காத்தல்.
இதனான்
இவ்வறத்தினை உடையதே
நல்நெறி என்பது
கூறப்பட்டது.
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம்
கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப்
பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார்
எல்லாருள்ளும், கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய
அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். பிறப்பு நின்ற
நிலையாவது,
இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம்
என்பது
ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு
ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம்
ஆகலின், ''நீத்தாருள்
எல்லாம்''
என்றார். இதனான் இவ்வறம்
மறவாதவன் உயர்ச்சி
கூறப்பட்டது. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணும் கூற்று. கொல்லாமையை விரதமாக
மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும்
கூற்றுச் செல்லாது. மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய
பாவம்
செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்
பயன்
அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம்
செய்தான்
தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள்
இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது,
என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால்
ஞானம்
பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும்
நன்மை
கூறப்பட்டது. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்

