தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   138


ஆகாது,  செல்வமுடையராதற்கு   ஆகும்   ஊழ் அறிவுடையராதற்கு
ஆகாது  என்றதாயிற்று.  ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய
துணைக்காரணமும்    வேண்டா    என்பது   பெற்றாம்.   நல்லவை
யெல்லாஅம்   தீயவாம்   தீயவும்   நல்லவாம்   செல்வம்  செயற்கு.
செல்வத்தை  ஆக்குதற்கு,  நல்லவை  எல்லாம்  தீயவாய் அழிக்கும்;
அதுவே   யன்றித்   தீயவை   தாமும்  நல்லவாய்  ஆக்கும்,  ஊழ்
வயத்தான்.   ''நல்லவை''  ''தீயவை''  யென்பன  காலமும்,   இடனும்,
கருவியும்,    தொழிலும்    முதலியவற்றை.    ''ஊழா''    னென்பது
அதிகாரத்தாற்    பெற்றாம்.   அழிக்குமூழுற்றவழிக்   கால  முதலிய
நல்லவாயினும்  அழியும்;  அழிக்குமூ  ழுற்றவழி அவை தீயவாயினும்
ஆகுமென்ப      தாயிற்று.      ஆகவே,      கால      முதலிய
துணைக்காரணங்களையும்  வேறுபடுக்குமென்பது  பெற்றாம். பரியினும்
ஆகாவாம்  பால்அல்ல  உய்த்துச்  சொரியினும்  போகா தம. தமக்கு
ஊழல்லாத  பொருள்கள்  வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்,
ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும்
தம்மை   விட்டுப்   போகா.   பொருள்களின்  நிலையும்  போக்கும்
ஊழினான்  ஆவதல்லது.  காப்பு  இகழ்ச்சிகளான்  ஆகா என்பதாம்.
இவை   ஆறு  பாட்டானும் பொருட்குக்  காரணமாய  ஊழின்  வலி
கூறப்பட்டது.     வகுத்தான்     வகுத்த    வகையல்லால்   கோடி
தொகுத்தார்க்கும்   துய்த்தல்  அரிது.  ஐம்பொறிகளான்  நுகரப்படும்
பொருள்கள்  கோடியை  முயன்று தொகுத்தார்க்கும், தெய்வம் வகுத்த
வகையான்   அல்லது   நுகர்தல்  உண்டாகாது.  ஓர்  உயிர்  செய்த
வினையின்  பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே
வகுத்தலின், வகுத்தான் என்றார். ''இசைத்தலும் உரிய வேறிடத்தா
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)