தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   137


த்   துணைக்காரணமாகிய     முயற்சி     மடிகளையும்     தானே
தோற்றுவிக்கும்   என்பது   கருத்து.   பேதைப்  படுக்கும்  இழவூழ்
அறிவகற்றும்  கல்ஊழ்  உற்றக்  கடை.  ஒருவனுக்கு எல்லா அறிவும்
உளவாயினும்,    கைப்பொருள்    இழத்தற்கு    ஏதுவாகிய   ஊழ்
வந்துற்றவிடத்து,  அஃது  அதனைப்  பேதையாக்கும்,  இனி  அவன்
அறிவு   சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு   ஏதுவாகிய   ஊழ்
வந்துற்றவிடத்து  அஃது  அதனை  விரிக்கும்.  கைப்பொருள்என்பது
அதிகாரத்தான்   வந்தது.   ''இழவு   ஊழ்,''  ''ஆகல்  ஊழ்''என்பன
இரண்டும்   வேற்றுமைத்தொகை.   ''உற்றக்கடை''என்பது   முன்னும்
கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.
நுண்ணிய  நூல்பல  கற்பினும்  மற்றும்தன் உண்மை அறிவே மிகும்.
பேதைப்படுக்கும்  ஊழுடையான்  ஒருவன்  நுண்ணிய பொருள்களை
உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குப் பின்னும்
தன்  ஊழான்  ஆகிய  பேதைமை உணர்வே மேற்படும்.  பாருளின்
உண்மை     நூலின்மேல்     ஏற்றப்பட்டது.     மேற்படுதல்   -
கல்வியறிவைப்பின்   இரங்குவதற்கு   ஆக்கிச்   செயலுக்குத்  தான்
முற்படுதல்.   ''காதன்   மிக்குழிக்   கற்றவும்   கைகொடா,   ஆதல்
கண்ணகத்தஞ்சனம்  போலுமால்''்  சீவக.கனக.  76  என்பதும்  அது.
செயற்கையானாய  அறிவையும்  கீழ்ப்படுத்தும்  என்பதாம்.  இருவே
றுலகத்  தியற்கை  திருவேறு  தெள்ளியர்  ஆதலும் வேறு. உலகத்து
ஊழினான்     ஆய    இயற்கை    இரண்டு    கூறு,   ஆதலால்
செல்வமுடையராதலும்     வேறு,     அறிவுடையராதலும்    வேறு.
செல்வத்தினைப்     படைத்தலும்     காத்தலும்    பயன்கோடலும்
அறிவுடையார்க்கல்லது  இயலாவன்றே? அவ்வாறன்றி,  அறிவுடையார்
வறியராகவும்      ஏனையார்      செல்வராகவும்     காண்டலான்,
அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)