தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   136


்மையின்,  நீத்தலே  தக்கது என்பது  கருத்து. களிப்புக்கு கவற்சிகளும்
பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின  இன்றி, உயிர் நிரதிசய
இன்பத்ததாய் நிற்றலின் வீட்டினை ''பேரா இயற்கை''  என்றும், அஃது
அவாநீத்த  வழிப்பெறுதல்  ஒரு தலையாகலின், ''அந்நிலையே தரும்''
என்றும்    கூறினார்.    ஒன்றாய்க்    கிடந்த    அரும்பெரும்பாழ்
உலப்பிலதனை   உணர்ந்துணர்ந்து,  சென்றாங்கு  இன்பத்துன்பங்கள்
செற்றுக்களைந்து  பசையற்றால்,  அன்றே அப்போதே வீடும் அதுவே
வீடு  வீடாமே.  திருவாய்  78-6என்பதும்  இக்கருத்தே பற்றி வந்தது.
இந்நிலைமை   உடையவனை  வடநூலார்  ''சீவன்  முத்தன''்  என்ப.
இதனால்  வீடாவது  இது  என்பதூஉம்,  அஃது அவா அறுத்தார்க்கு
அப்பொழுதே   உளதாம்   என்பதூஉம்  கூறப்பட்டன.  துறவறவியல்
முற்றும்.  இவ்வாற்றான், இம்மை மறுமை வீடு என்னும்  மூன்றனையும்
பயத்தற்   சிறப்புடையதாய   அறம்  கூறினார்;  இனிப்   பொருளும்
இன்பமும்   கூறுவார்  அவற்றின்  முதற்காரணமாகிய  ஊழின்  வலி
கூறுகின்றார்.    அஃதாவது,    இருவினைப்பயன்   செய்தவனையே
சென்றடைதற்கு  ஏதுவாகிய  நியதி.  ஊழ்,  பால்,  முறை,  உண்மை,
தெய்வம்,  நியதி,  விதியென்பன  ஒருபொருட்கிளவி.  இது  பொருள்
இன்பங்கள்    இரண்டிற்கும்    பொதுவாய்   ஒன்றனுள்   வைக்கப்
படாமையானும்,  மேற்கூறிய  அறத்தோடு  இயைபு  உடைமையானும்,
அதனது   இறுதிக்கண்   வைக்கப்பட்டது.   ஆகூழால்   தோன்றும்
அசைவின்மை  கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. ஒருவற்குக்
கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; அஃது
அழிதற்குக்  காரணமாகிய  ஊழான் மடி உண்டாம். ஆகூழ், போகூழ்
என்னும்    வினைத்தொகைகள்   எதிர்காலத்தான்   விரிக்கப்பட்டுக்
காரணப்பொருளவாய்  நின்றன.  அசைவு  -மடி. பொருளின்  ஆக்க
அழிவுகட்கு
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)