Primary tabs


யின், உம்மை
எச்ச உம்மை. எல்லாம்
வழியாக
வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான்
அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது. இனி,
இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும்
பயப்பதாயபொருள்
கூறுவான் எடுத்துக் கொண்டார்.
அது தன்
துணைக்காரணமாய அரச நீதி கூறவே
அடங்கும். அரச நீதியாவது,
காவலை நடாத்தும்
முறைமை, அதனை அரசியல், அங்கவியல்
,ஒழிபியல்
என மூவகைப்படுத்து, மலர்தலை உலகிற்கு
உயிரெனச்
சிறந்த அரசனது இயல்பு,
இருபத்தைந்து அதிகாரத்தால் கூறுவான்
தொடங்கி,
முதற்கண் இறை மாட்சி
கூறுகின்றார். அஃதாவது
அவன்றன் நற்குண
நற்செய்கைகள், உலக பாலர் உருவாய் நின்று
உலகம் காத்தலின், '' இறை '' என்றார்: ''திருவுடை
மன்னரைக்
காணின் திருமாலைக் கண்டேனே என்னும், ''திருவாய் 4,4,8 -
திருவாய் 34,8 என்று பெரியாரும் பணித்தார். படைகுடி
கூழ்அமைச்சு
நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படையும் குடியும்
கூழும்
அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட
ஆறு
அங்கங்களையும் உடையவன், அரசருள்
ஏறு போல்வான். ஈண்டுக்
''குடி'' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது,
அதற்கு
ஏதுவாகிய பொருளை. அமைச்சு,
நாடு, அரண், பொருள்,
படை,
நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச்
செய்யுள் நோக்கிப் பிறழ
வைத்தார்.
''ஆறும்''் உடையான் என்றதனால், அவற்றுள்
ஒன்று
இல்வழியும் அரசநீதி
செல்லாது என்பது பெற்றாம். வடநூலார்
இவற்றிற்கு
''அங்கம்''் எனப்பெயர் கொடுத்த

