தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   147


முகத்தின்கண்      இரண்டு       புண்ணுடையர்,      கண்ணிலர்
தேயம்இடையிட்டவற்றையும்  காலம்  இடையிட்டவற்றையும்  காணும்
ஞானக்கண்உடைமையின்    கற்றாரைக்    கண்ணுடையர்   என்றும்
அஃதின்றி       நோய்முதலியவற்றால்      துன்பம்      செய்யும்
ஊனக்கண்ணேஉடைமையின்,  கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும்
கூறினார். மேல்    கண்ணன்மை    உணரநின்ற    ஊனக்கண்ணின்
மெய்ம்மைகூறியவாற்றான்,          பொருள்         நூல்களையும்
கருவிநூல்களையும்கற்றாரது  உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான்
தொகுத்துக்கூறப்பட்டன.   உவப்பத்   தலைக்கூடி  உள்ளப்  பிரிதல்
அனைத்தே   புலவர்   தொழில்.  யாவரையும்.  அவர்  உவக்குமாறு
தலைப்பெய்து,   இனி   இவரை   யாம்  எங்ஙனம்  கூடுதும்?  என
நினையுமாறு  நீங்குதலாகிய  அத்தன்மைத்து,  கற்றறிந்தாரது தொழில்.
தாம்  நல்வழி  ஒழுகல்  பிறர்க்கு  உறுதி கூறல்  என்பன இரண்டும்
தொழில்  என  ஒன்றாய்  அடங்குதலின்,  ''அத்தன்மைத்து'' என்றார்.
அத்தன்மை:    அப்பயனைத்    தரும்   தன்மை.   நல்லொழுக்கம்
காண்டலானும்,  தமக்கு  மதுரமும்  உறுதியுமாய  கூற்றுக்கள் நிகழ்வு
எதிர்வுகளின்   இன்பம்   பயத்தலானும்   கற்றார்மாட்டு  எல்லாரும்
அன்புடையராவர்  என்பதாம்.  இதனால்  கற்றாரது உயர்வு வகுத்துக்
கூறப்பட்டது.   உடையார்முன்   இல்லார்போல்   ஏக்கற்றுங் கற்றார்
கடையரே  கல்லா  தவர்.  ''பிற்றை  நிலைமுனியாது  கற்றல்  நன்று''
புறநா.183  ஆதலான், செல்வர்முன்  நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத்
தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)