Primary tabs


ஒறுத்தல் என நால்வகைப்படும்.
இவற்றை வடநூலார் தான, சாம,
பேத, தண்டம்
என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய.
ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின்
பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை
மாற்றானால்விலக்கப்பட்டு
முடியாமையானும்,
இடையின்
ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை
''இழுக்கு''என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே
தொடங்குகஎன்பதாம். ஆற்றின் வருந்தா வருத்தம்
பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். முடியும் உபாயத்தால் கருமத்தை
முயலாத முயற்சி, துணைவர் பலர் நின்று போற்றினும் பொத்துப்படும்
- துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும். முடியும்
உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள்
நசையாளன்
கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே
பிறரொடு பொருது
நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத்
துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான்
என
இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும்,
தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல்.
புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல்.
உபாயத்தது சிறப்புக் கூறியவாறு. நன்றாற்ற லுள்ளும் தவறுண்
டவரவர் பண்பறிந்
தாற்றாக் கடை. வேற்று வேந்தர்மாட்டு நன்றான
உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் குணங்களை
ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். நன்றான
உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர்
கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை
சிறப்பு உம்மை.
அவற்றை அவர

