Primary tabs


வர் பண்பு அறிந்து
ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர்
அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.
எள்ளாத
எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு.
அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு
பொருந்தாத
உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை
இகழாநிற்கும்,
ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க. ''தம்''
என்பது
ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச்
செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல்
முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு
உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும்
அறிவிலார்
செய்வன ஆகலின், ''உலகம் கொள்ளாது''
என்றார். அஃது எள்ளாதன
செய்தலாவது: அவற்றைத்
தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச்
செய்தல்.
மேல் இடவகையான் உரிமை
கூறிய உபாயங்கட்கு
வினைமுதல் வகையான்
உரிமை கூறியவாறு. இவை நான்கு
பாட்டானும்
செய்வனவற்றிற்கு உபாயமும்
அதனது உரிமையும்
கூறப்பட்டன. அஃதாவது
,அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் குறித்த
அரசன்
நால்வகை வலியையும் அளந்தறிதல்,
அதிகாரமுறைமையும்
இதனானே விளங்கும். வினைவலியும் தன்வலியும் மாற்றான்
வலியும்
துணைவலியும் தூக்கிச்
செயல். தான்
செய்யக்கருதிய
வினைவலியையும், அதனைச்
செய்து முடிக்கும் தன் வலியையும்,
அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், இருவர்க்குந்
துணையாவார் வலியையும், சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின்
அவ்வினையைச் செய்க. இந் நால்வகை வலியுள் வினைவலி அரண்
முற்றலும் கோடலும்
முதலிய தொழி

