தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   181


தல்.  தொடக்கத்தில்   கேடு    வெளிப்படாமையின்,   ''உளபோலத்
தோன்றி'' என்றார். முதலிற்  செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.
உளவரை  தூக்காத  ஒப்புர  வாண்மை  வளவரை  வல்லைக் கெடும்.
தனக்குள்ள   அளவு  தூக்காமைக்கு  ஏதுவாய  ஒப்புரவாண்மையால்,
ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும். ''ஒப்புரவே ஆயினும்
மிகலாகாது''  என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும்
மூவகை  ஆற்றலுள்  பெருமையின்  பகுதியாய  பொருள் வலியறிதல்
சிறப்பு   நோக்கி   வகுத்துக்   கூறப்பட்டது.  அஃதாவது,  வலியான்
மிகுதியுடையனாய்ப்  பகைமேல்  சேறலுற்ற  அரசன்,  அச்செலவிற்கு
ஏற்ற   காலத்தினை   அறிதல்,   அதிகாரமுறைமையும்   இதனானே
விளங்கும்.   பகல்வெல்லும்   கூகையைக்   காக்கை  இகல்வெல்லும்
வேந்தர்க்கு   வேண்டும்  பொழுது.  தன்னின்  வலிதாய கூகையைக்
காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், அது போலப் பகைவரது
இகலை வெல்லக்  கருதும்  அரசர்க்கு  அதற்கு  ஏற்ற காலம் இன்றி
அமையாதது.  எடுத்துக்காட்டு  உவமை,  காலம் அல்லாவழி வலியால்
பயன்  இல்லை  என்பது  விளக்கி  நின்றது.  இனிக்  காலம் ஆவது,
வெம்மையும்   குளிர்ச்சியும்   தம்முள்   ஒத்து,   நோய்  செய்யாது,
தண்ணீரும்   உணவும்  முதலிய  உடைத்தாய்த்  தானை  வருந்தாது
செல்லும்  இயல்பினதாம்.  இதனால்  காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.
பருவத்தோ  டொட்ட  ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.
அரசன்    காலத்தோடு    பொருந்த    வினைசெய்து    ஒழுகுதல்,
ஒருவர்கண்ணும்  நில்லாது  நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல்
பிணிக்கும்  கயிறாம். ''காலத்தோடு  பொருந்துதல் - காலம் தப்பாமல்
செய்தல். ''தீராமை'' என்றதனால்,
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)