Primary tabs


வெல்வதாக எண்ணி
இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை
இழப்பர். ''அரண்'' என்பது அவாய் நிலையான் வந்தது.
''எண்ண''
என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. ''அதனை இழப்பர்'' என்றார்,
அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர்
பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர்
அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப்
பிற முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம்
தான் வெல்லாநிற்கும், அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற
எல்லாம் வெல்லா நிற்கும். எனவே, ''எல்லாரும் தம்நிலத்து வலியர்''்
என்பது கூறப்பட்டது. ''பிற'' என்பது முன்னும்
கூட்டப்பட்டது.
நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம்
முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண்
அஃது இயங்கலாற்றாமையின், ''அஃது
அவற்றிற்கெல்லாம் எளிதாம்'',
என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து
செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா
இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள்
தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம்.
அவரை
அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று
வெல்க என்பதாம்.
கடல்ஓடா கால்வல்
நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா
நிலத்து
நிலத்தின்கண் ஓடும்
கால்வலிய நெடிய தேர்கள்
கடலின்கண்
ஓடமாட்டா, இனி அக்கடலின்கண்
ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின்
கண் ஓடமாட்டா.
''கடல் ஓடா'' என்ற மறுதலை அடையான் ''நிலத்து
ஓடும்''் என்பது வருவிக்கப்பட்டது. ''கால்வல்
நெடுந்தேர்''் என்பது
ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட
நின்றது. ''மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு
ஏற்ற கருவிகளான் வினை
செய்க'' என்ப

