Primary tabs


உலகநடை இயல்பு சுற்றம்
இல்லாதார்க்கு இன்மையின், அவர்
தெளியப்படார் என்பதாம். காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். அன்பு உடைமை பற்றுக்கோடாகத்
தமக்கு
அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், அரசனுக்கு எல்லா
அறியாமையும் கொடுக்கும் தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி
அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது
அவர்
அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு
உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு
அறியாமை பலவும் உளவாம் என்பதாம். தேரான் பிறனைத்
தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
தன்னோடு
இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும்
செயலானும்
ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு, அத்தெளிவு தன்
வழிமுறையினும்
நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். இயைபு: தன் குடியோடு
தொடர்ந்த
மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல்
அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன்
குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம்.
நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. தேறற்க யாரையும் தேராது
தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். யாவரையும் ஆராயாது தெளியா
தொழிக, ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
''தேறற்க'' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது
என்பது பெற்றாம். ஈண்டு, ''தேறுக'' என்றது தாற்பரியத்தால்
ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. ''தேறும் பொருள்''் என்றது
அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. ''பொருள்''் ஆகுபெயர்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.
அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன்
மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், அவனுக்கு நீங்காத துன்பத்தைக்
கொடுக்கும். வினை வைத்த பின்

