தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   5

    உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
    பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
    ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
    தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
    விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
    மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
    மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
    நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென
    அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது
    கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
    மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்
    இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்
    சமயக் கணக்கரும் தம்துறை போகிய
    அமயக் கணக்கரும் அகலார் ஆகிக்
    கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்
    பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
    ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
    வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
    கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
    விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
    மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க
    இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
    தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்
    புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும்
    மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
    ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கென
    வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
    கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
    ஏற்றுஉரி போர்த்த இடியுறு முழக்கின்
    கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
    முர
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:11:48(இந்திய நேரம்)