தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   188

    விசும்பின் ஆகாய கங்கை
    வேணவாத் தீர்த்த விளக்கே வாஎனப்
    பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு
    அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள்
    நின்னால் வணங்கும் தன்மையள் வணங்குஎனப்
    பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய
    கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
    கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
    தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை
    தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி
    கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து
    தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
    செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
    என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்
    நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன
    இருபால் பெயரிய

      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:48:29(இந்திய நேரம்)