தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   192

    செய் கென்றதும் சிறைவீடு செய்ததும்
    நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
    ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
    ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
    ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்
    உற்றவள் ஆங்குஓர் உயர்ந்தவன் வடிவாய்ப்
    பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
    நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
    சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும்
    ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
    பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
    புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
    மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
    தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
    பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
    இளங்கோ வேந்தன் அருளிக்
      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 08:49:17(இந்திய நேரம்)