தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   528

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குஒளி மேனி விரிசடை யாட்டி
பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்திசைப் பெயர்ந்தஇத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பா பதியினள்
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக்கு ஒழுகிய அச்சம்பா பதிஅயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள்
ஓங்குநீர்ப் பாவையை உவந்துஎதிர் கொண்டு ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாஎனப்
பின்னிலை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:56:54(இந்திய நேரம்)