தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   529

    முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு
    அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள்
    நின்னால் வணங்கும் தன்மையள் வணங்குஎனப்
    பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய
    கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
    கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
    தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை
    தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி
    கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து
    தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
    செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
    என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்
    நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன
    இருபால் பெயரிய உருகெழு மூதூர்
    ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப்
    பெருவிழா அறைந்ததும்; பெருகியது அலர்எனச்
    சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான்
    வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும்;
    மணிமே கலை
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:57:06(இந்திய நேரம்)