தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   530

    தான் மாமலர் கொய்ய
    அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
    ஆங்குஅப் பூம்பொழில் அரசிளங் குமரனைப்
    பாங்கில் கண்டுஅவள் பளிக்கறை புக்கதும்
    பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
    துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
    மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
    மணிமே கலையைமணி பல்லவத்து உய்த்ததும்
    உவவன மருங்கின்அவ் வுரைசால் தெய்வதம்
    சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம்
    ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள்
    தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்
    உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகை
    பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
    உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்றி
    மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்
    தீப திலகை செவ்வனம் தோன்றி
    மாபெரும் பாத்திரம் மடக்கொ
     
      
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:57:18(இந்திய நேரம்)