தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Soolamani Malai

சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1

1.
வென்றான் வினையின் றொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றும்
சென்றான் றிகழுஞ் சுடர் சூழொளிமூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.
 
2.
அங்கண் ணுலகிற் கணிவான் சுடராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாட்
பைங்கண் மதர்வைப் பகுவா யரியேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்.
 
3.
கொற்றங்கொ ணேமி நெடுமால் குணங் கூறவிப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத் தமிழ்நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமா யினுநங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற் பெரியார்க ளன்றே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 23:49:23(இந்திய நேரம்)