தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு குன்னாண்டார் திருக்கோயில்

கீரனூர் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடைவரைக் கோயில்களைக் கொண்ட ஊர் குன்னாண்டார் கோயில் ஆகும். குன்றக்குடி என்பதே இவ்வூரின் பழம்பெயராகும். இங்குள்ள சிவன்கோயில் இறைவன் குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றார். இப்பெயர்களே குன்றாண்டார் என்று அழைக்கப்பட்டு இன்று குன்னாண்டார் கோயில் என்று மருவி இவ்வூருக்கு உரிய பெயராக விளங்குகிறது. அழகிய ஆடல்மண்டபம், கோபுரம் இரு குடைவரைகளைக் கொண்ட கோயிலாகக் குன்னாண்டார் கோயில் காட்சியளிக்கிறது. முற்றுப்பெற்ற குடைவரையும் முற்றுப்பெறாத குடைவரையும் குன்னாண்டார் கோயிலில் உள்ளன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:29(இந்திய நேரம்)
சந்தா RSS - குன்றக்குடி