தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அதிமதுரம் வேர்

  • அதிமதுரம் வேர்

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    வேறு பெயர்கள் : மதூகம், குன்றி வேர்
    ஆங்கிலப் பெயர் : Jamaica Liquorice
    தாவரவியல் பெயர் : Glycyrrhiza glabra

    செய்கைகள்

    மலமிளக்கி - Laxative
    கோழையகற்றி - Expectorant
    வறட்சியகற்றி - Emollient
    உரமாக்கி - Tonic

    மருத்துவப் பயன்கள் :

    - அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    - அதிமதுரத்தைத் தாய்ப்பாலில் இழைத்து கண்ணிலிட கண் நோய்கள் தீரும். கண் மங்கல் நீங்கித் தெளிவாகக் காணும்.

    - அதிமதுர வேர்ப்பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    - அதிமதுரக் குடிநீரால் சிறுநீரக சம்பந்தமான நோய்கள் தீரும்.

    - அதிமதுரம், சந்தனம் சமஅளவு எடுத்து பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி தீரும்.

    - அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்து வர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    - அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்.

    - அதிமதுர வேர், நன்னாரி, வெட்டிவேர், வில்வம் இவற்றைக் குடிநீரிட்டு அருந்த அதிதாகம் தீரும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:04:44(இந்திய நேரம்)