வெற்றி யாருக்கு?
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தமிழகத்தில் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கிய வடிவம் சிறுகதை என்பார்கள். ஆனாலும், அதற்கு முன்பாகவே ஏட்டில் எழுதப்படாமல், மக்களின் பேச்சு வழக்கில் சொல்லுகின்ற நாட்டுப்புறக் கதைகளாகச் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. அவ்வாறே தமிழில் வேடிக்கையாகக் கதை சொல்லும் போக்கும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதைகள் என்ற பெயரில் வேடிக்கைக் கதைகளை எழுதியிருக்கின்றார், பாரதியாரும் சின்னஞ்சிறு வேடிக்கைக் கதைகள் எழுதியிருக்கின்றார். புகழ்பெற்ற தெனாலிராமன் கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள், முல்லா கதைகள் போன்றவை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டக்கூடிய வேடிக்கைக் கதைகள் ஆகும். அத்தகுக் கதைகள் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய கதைகள் ஆகும். கற்பனையைக் கலந்து எளிதான நடையில் சொல்லப்பெறும் இந்தக் கதைமரபில் கற்பனையாக எழுதப்பெற்ற கதை ஒன்றைத்தான் இங்குப் பாடமாகப் பயில இருக்கின்றீர்கள்!.