8. வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  அரசவையில் மன்னன் எழுப்பிய கேள்வி யாது?

அரசவையில் மன்னன் எழுப்பிய கேள்வி சிறந்த மலர் எது? என்பதாகும்.

2.  வெற்றி யாருக்கு? எனும் கதையில் சொல்லப்பெறும் மலர்களில் இரண்டின் பெயர்களைத் தருக.

வெற்றி யாருக்கு? எனும் கதையில் சொல்லப்பெறும் இரு மலர்கள் மல்லிகை, முல்லை.

3.  மரகதவர்மனுக்கு எதில் விருப்பம் அதிகம்?

பொழுதுபோக்காகப் போட்டி நடத்துவதில் மரகதவர்மனுக்கு விருப்பம் அதிகம்.

4.  முல்லைப்பூவை அமைச்சர் ஒருவர் எதற்கு உவமையாகக் கூறினார்?

முல்லைப் பூவை அமைச்சர் ஒருவர் மன்னரின் பற்களுக்கு உவமையாகக் கூறினார்.

5.  மன்னன் சிரிக்கின்றபோது எப்படி இருக்கும்?

மன்னன் சிரிக்கின்றபோது பெட்டைக் கோழி முட்டையிடுகிறபோது கத்துகிற மாதிரி இருக்கும்.

6.  வெற்றி யாருக்கு? என்ற கதையில் உன் மனம் கவர்ந்த பாத்திரம் எது?

வெற்றி யாருக்கு? என்ற கதையில் என் மனம் கவர்ந்த பாத்திரம் அமைச்சர் நலம்விரும்பி.

7.  மன்னன் பாராட்டும்போது எவற்றைப் பரிசாக அளிப்பான்?

மன்னன் பாராட்டும்போது பொற்காசுகளையும், முத்து மாலைகளையும் பரிசாக அளிப்பான்.

8.  பருத்திப்பூவே சிறந்தது என்று அமைச்சர் நலம்விரும்பி கூறியதற்குரியக் காரணம் என்ன?

பருத்தி மலரிலிருந்து விளையும் பஞ்சினால் கிடைக்கும் ஆடைதான் நம் மானம் காக்கும் என்பதால் பருத்திப் பூவே சிறந்தது என்று காரணம் காட்டினார் அமைச்சர் நலம்விரும்பி.

9.  மற்ற மந்திரிகளுக்கு என்ன அச்சம் தோன்றியது?

தாம் நினைத்த பூவின் பெயரை மற்றவர் சொல்லிவிடக் கூடாதே என்ற அச்சம் மற்ற மந்திரிகளுக்குத் தோன்றியது.

10.  சில சமயங்களில் மன்னரின் சிரிப்பு எவ்வாறு இருக்கும்?

சிலசமயங்களில் மன்னர் விக்கல் எடுப்பது போலச் சிரிப்பார்.