8. வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

பாடஅறிமுகம்
Introduction to Lesson


மகதநாட்டின் மன்னன் மரகதவர்மன். நாளும் ஒரு வேடிக்கை, போட்டி என்று நடத்துவதில் விருப்பம் உள்ளவன், ஒரு நாள் அவனது அரசவையில் உலகிலேயே சிறந்த மலர் எது? என்ற கேள்வி வந்துவிடுகிறது. சரியான பதிலைச் சொல்பவர்களுக்கு ஒரு இலட்சம் பொற்காசுகளைப் பரிசாகத் தருவதாக அறிவிக்கின்றான். பலரும் பலவிதமான மலர்களின் பெயர்களையும் அவை, சிறந்த மலர்களாவதற்கான விளக்கங்களையும் சொல்லுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் ஏற்புடையனவாக இல்லை. அதனால் பலரும் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகின்றார்கள். அப்போது மரகதவர்மனின் அமைச்சருள் ஒருவரான நலம்விரும்பி ஒரு மலரின் பெயரைக் கூறி அதன் சிறப்புகளை உணர்த்துகின்றார். அதனை ஏற்றுக்கொண்ட மன்னன் அதற்கான பரிசுத் தொகையைக் கொடுக்க வரும்போது அமைச்சர் மறுத்துவிடுகின்றார்.

அமைச்சர் சொன்ன மலரின் பெயர் என்ன? தனக்கு வேண்டாம் என்று மறுத்த அந்தப் பரிசிலை அவர் வேறு யாருக்குக் கொடுக்கச் சொன்னார்? உண்மையில் வெற்றி யாருக்கு? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றீர்கள் அல்லவா? இதோ இந்தக் கதையைப் படியுங்கள்.