வெற்றி யாருக்கு?
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மன்னன் தாம் வெட்டிய ஏரிக்கு ---------- பெயரை வைத்தார்.
மன்னன் தாம் வெட்டிய ஏரிக்கு அமைச்சர் நலம்விரும்பியின் பெயரை வைத்தார்.
2. ஏட்டில் எழுதாக் கதைகள் --------- ஆகும்.
ஏட்டில் எழுதாக் கதைகள் நாட்டுப்புறக் கதைகள் ஆகும்.
3. கோழிக்கு விக்கல் எடுப்பதுபோல் சிரிப்பவர் --------
கோழிக்கு விக்கல் எடுப்பதுபோல் சிரிப்பவர் மன்னன் மரகதவர்மன்
4. மன்னன் பரிசாக அளித்த தொகை -------- ஆகும்.
மன்னன் பரிசாக அளித்த தொகை ஒரு இலட்சம் பொற்காசுகள் ஆகும்.
5. அமைச்சர் நலம்விரும்பி கூறிய மலரின் பெயர் ----------- ஆகும்.
அமைச்சர் நலம்விரும்பி கூறிய மலரின் பெயர் பருத்தி மலர் ஆகும்.
6. உலகில் சிறந்த மலர் ----------
உலகில் சிறந்த மலர் பருத்தி மலர்
7. மக்களுக்கு ---------------, ------------- அளிப்பன பயிர்கள்.
மக்களுக்கு உணவும், உடையும் அளிப்பன பயிர்கள்.
8. மன்னன் மரகதவர்மன் வெட்டிய ஏரிக்கு வைத்த பெயர் ------
மன்னன் மரகதவர்மன் வெட்டிய ஏரிக்கு வைத்த பெயர் நலம்விரும்பி
9. மன்னன் அளித்த பரிசுத் தொகையை அமைச்சர் நலம்விரும்பி --------------- என்றார்.
மன்னன் அளித்த பரிசுத் தொகையை அமைச்சர் நலம்விரும்பி வேண்டாம் என்றார்.
10. பரமார்த்தகுரு கதைகள் என்ற நூலை எழுதியவர் ------------
பரமார்த்தகுரு கதைகள் என்ற நூலை எழுதியவர் வீரமாமுனிவர்