9. நாட்டுக்கொடி

நாட்டுக்கொடி

பாட அறிமுகம்
Introduction of Lesson


இப்பொழுது உங்களுக்குப் பாடமாக அமைந்துள்ள இப்பகுதியில் நம் இந்திய நாட்டுக் (தேசியக்) கொடி தன் கதையைத் தானே கூறுகின்றது. உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை உணர்த்தும் கொடிகள் இருக்கின்றன. அந்தந்த நாட்டுக் (தேசியக்) கொடிகள் தத்தம் நாட்டின் கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்டவையாகும். இந்திய நாட்டுக் கொடியாகிய என்னைப்பற்றி நான் பேசுவது எனக்குப் பேரின்பம் கொடுக்கின்றது. இந்திய நாட்டின் பாதுகாப்பையும் வளமையையும், வாழ்வையும் எதிரொலிக்கும் என் கதையைக் கேளுங்கள்.