நாட்டுக்கொடி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இந்திய நாட்டுக்கொடியில் உள்ள நிறங்கள் ------------.
இந்திய நாட்டுக்கொடியில் உள்ள நிறங்கள் மூன்று
2. இந்திய நாட்டுக்கொடியைக் கண்டறிந்தவர் -------------.
இந்திய நாட்டுக்கொடியைக் கண்டறிந்தவர் ஏ.ஒ.கியும்.
3. நாட்டுக் கொடியின் நடுவில் உள்ள சக்கரம் -----------.
நாட்டுக் கொடியின் நடுவில் உள்ள சக்கரம் அறச்சக்கரம்
4. நாட்டுக்கொடியின் நடுவில் உள்ள நிறம் ---------.
நாட்டுக்கொடியின் நடுவில் உள்ள நிறம் வெண்மை.
5. நாட்டுக்கொடி --------, ----------- ஆகிய நாட்களில் கொடிக்கம்பத்தில் ஏற்றிப் பறக்க விடுவர்.
நாட்டுக்கொடி விடுதலை நாள்விழா, குடியரசு நாள் விழா ஆகிய நாட்களில் கொடிக்கம்பத்தில் ஏற்றிப் பறக்க விடுவர்.
6. தலைவர்கள் இறந்தால் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டியது ---------.
தலைவர்கள் இறந்தால் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டியது நாட்டுக்கொடி
7. இந்தியத் தந்தை என்று போற்றப் பெறுபவர் --------------.
இந்தியத் தந்தை என்று போற்றப் பெறுபவர் காந்தி அடிகள்.
8. இந்தியத் தாய்க்கு உண்மையான ஆடை ------------.
இந்தியத் தாய்க்கு உண்மையான ஆடை நாட்டுக்கொடி.
9. ஒரு நாட்டின் உயிர் மூச்சாகத் திகழ்வது -----------.
ஒரு நாட்டின் உயிர் மூச்சாகத் திகழ்வது நாட்டுக்கொடி.
10. நாட்டுக்கொடியின் பச்சை வண்ணம் ------------க் காட்டுகின்றது.
நாட்டுக்கொடியின் பச்சை வண்ணம் வளமையைக் காட்டுகின்றது.