நாட்டுக்கொடி
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. இந்திய நாட்டுக்கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?
இந்திய நாட்டுக் கொடியில் மூன்று நிறங்கள் உள்ளன.
2. காங்கிரசு என்னும் பேரியக்கத்தின் தந்தை யார்?
காங்கிரசு என்னும் பேரியக்கத்தின் தந்தை ஏ.ஒ.கியூம் என்னும் ஆங்கிலேயர் ஆவார்.
3. இந்திய நாட்டுக்கொடியில் உள்ள மூன்று நிறங்கள் யாவை?
இந்திய நாட்டுக் கொடியில் உள்ள மூன்று நிறங்கள் செம்மை, வெண்மை, பசுமை ஆகியன ஆகும்.
4. இந்திய நாட்டுக்கொடியின் நடுவில் உள்ள சக்கரத்தின் பெயர் என்ன?
இந்திய நாட்டுக்கொடியின் நடுவில் உள்ள சக்கரத்தின் பெயர் அசோகச் சக்கரம் ஆகும்.
5. இந்தியத் தந்தை காந்தியடிகளின் நினைவாகப் பேராயக் கட்சியின் கொடியில் உள்ள சின்னம் எது?
இந்தியத் தந்தை காந்தியடிகளின் நினைவாகப் பேராயக் கட்சியின் கொடியில் உள்ள சின்னம் இராட்டை.
6. இந்தியத் தந்தை என்று போற்றப் பெறுபவர் யார்?
இந்தியத் தந்தை என்று போற்றப் பெறுபவர் அண்ணல் காந்தியடிகள்.
7. இந்தியாவின் மானம் காப்பது எது?
இந்தியாவின் மானம் காப்பது நாட்டுக்கொடி ஆகும்.
8. இந்திய நாட்டுக்கொடி எப்போது அரைக் கம்பத்தில் பறக்கும்?
இந்திய நாட்டுக்கொடி யாராவது முக்கியத் தலைவர் இறந்தால் அரைக் கம்பத்தில் பறக்கும்.
9. இந்திய விடுதலைக்குத் தொடக்க வித்தாக அமைந்தது எது?
இந்திய விடுதலைக்குத் தொடக்க வித்தாக அமைந்தது நாட்டுக்கொடித் தோற்றமாகும்.
10. இந்திய நாட்டுக்கொடியின் மையத்தில் உள்ள நிறம் என்ன?
இந்திய நாட்டுக்கொடியின் மையத்தில் உள்ள நிறம் வெண்மை.