3. காப்பிய இலக்கியம்

சிலப்பதிகாரம்

மையக்கருத்து
Central Idea


பற்பல இசைக்கருவிகள் முழங்க, அழகிய திருமண மண்டபத்தில் கோவலன், கண்ணகி திருமணம் எழிலுற நிகழ்ந்தது. மங்கலப் பொருள்களை ஏந்திய மகளிர் பலர் 'பல்லாண்டு வாழ்க’ என மணமக்களை வாழ்த்தினர்.

In a marriage hall, to the accompaniment of musical instruments, the marriage between Kovalan and Kannagi took place. Women holding holy and pure things blessed them to live long.