சிலப்பதிகாரம்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. சிறுகாப்பியம் ஒன்றன் பெயரினை எழுதுக.
சிறுகாப்பியம் ஒன்றன் பெயரினை எழுதுக.
2. ஐம்பெருங்காப்பியங்களுள் இரண்டின் பெயர்களைத் தருக.
ஐம்பெருங்காப்பியங்களுள் இரண்டின் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை.
3. அருந்ததி அனையாள் என்று போற்றப் பெற்றவள் யார்?
அருந்ததி அனையாள் என்று போற்றப்பெற்றவள் கண்ணகி.
4. கண்ணகியை மங்கல நல்அமளி ஏற்றியவர் யாவர்?
கண்ணகியை மங்கல நல்அமளி ஏற்றியவர் பொலன்நறும் கொடி போன்ற பெண்கள்.
5. சிலப்பதிகாரம் மொத்தம் எத்தனைக் காண்டங்களை உடையது?
சிலப்பதிகாரம் மொத்தம் மூன்று காண்டங்களை உடையது.
6. கோவலன் கண்ணகி திருமணம் நடைபெற்ற ஊர் எது?
கோவலன் கண்ணகி திருமணம் நடைபெற்ற ஊர் காவிரிப்பூம்பட்டினம்.
7. முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்பெறுவது எது?
முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்பெறுவது சிலப்பதிகாரம்.
8. தீவலம் செய்தவர் யாவர்?
தீவலம் செய்தவர் கோவலனும் கண்ணகியும் ஆவர்.
9. சகடு என்னும் சொல்லின் பொருள் யாது?
சகடு என்னும் சொல்லின் பொருள் உரோகிணி.
10. திருமண மேடை விதானம் எதனால் அழகு பெற்றது?
திருமண மேடை விதானம் நீலப்பட்டினால் அழகு பெற்றது.