சிலப்பதிகாரம்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்.
முந்தைய வகுப்பில் காப்பிய இலக்கியத்தில் கம்பராமாயணம் பற்றி பார்த்தோம். இந்த வகுப்பில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் பற்றிக் காண்போம். சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவகசிந்தாமணி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். சூளாமணி, நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி ஆகியவை சிறுகாப்பியங்கள்.காப்பியம் தொடர்கதை போல அமைவதால் அதனைத் தொடர்நிலைச் செய்யுள் என்று சொல்வது உண்டு. பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஒரு பகுதியைத்தான் இங்குப் பாடமாகப் பயில இருக்கின்றீர்கள்.