காவிரி
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. தமிழ்நாட்டில் சிறந்த ஆறு எது?
தமிழ்நாட்டில் சிறந்த ஆறு காவிரி.
2. உலகில் மிகப் பெரிய ஆறு எது?
உலகில் மிகப் பெரிய ஆறு நைல்.
3. காவிரி எங்குக் கடலுடன் கலக்கிறது?
காவிரியாறு காவிரிப்பூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறது.
4. காவிரியாறு தோன்றும் மலை எது?
காவிரியாறு தோன்றும் மலை குடகு மலையாகும்.
5. காவிரி அளவில் குறைந்துள்ளதை எப்படி அழைப்பர்?
அளவில் குறைந்த காவிரியை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
6. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை இலிட்டர் தண்ணீர் குடிக்கிறான்?
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 60,600 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்.
7. காவிரிப்பூம்பட்டினம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?
காவிரிப் பூம்பட்டினம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது.
8. அகண்ட காவிரி எங்கு இளைத்து மெலிகிறது?
அகண்ட காவிரி மயிலாடுதுறையில் உடல் இளைத்து மெலிகிறது.
9. ‘சோழநாடு சோறுடைத்து’ எனப் பாடியவர் யார்?
சோழ நாடு சோறுடைத்து எனப் பாடியவர் ஒளவையார்.
10. காவிரி ஆறு, தமிழகத்தின் எப்பகுதிகளை வளப்படுத்துகிறது?
காவிரி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய பகுதிகளை வளப்படுத்துகிறது.