9. காவிரி

காவிரி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  காவிரியின் வேறுபெயர் ------------.

காவிரியின் வேறுபெயர் பொன்னி

2.  ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு ---------- உண்டு.

ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு கதை உண்டு.

3.  காவிரியின் கரையை ------------ உயர்த்தினான்.

காவிரியின் கரையை கரிகால் சோழன் உயர்த்தினான்.

4.  ‘சோழ நாடு சோறுடைத்து’ என ---------------- பாடினார்.

‘சோழ நாடு சோறுடைத்து’ என ஒளவையார் பாடினார்.

5.  ‘பூவர் சோலை’ என்ற பாடல் -------------------- இடம் பெற்றுள்ளது.

‘பூவர் சோலை’ என்ற பாடல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

6.  ------------- அணையில் காவிரி சேமிக்கப்படுகிறாள்.

மேட்டூர் அணையில் காவிரி சேமிக்கப்படுகிறாள்.

7.  காவிரிக் கரையில் --------------- பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

காவிரிக் கரையில் திருவரங்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

8.  காவிரி இளைத்த இடம் ------------.

காவிரி இளைத்த இடம் மயிலாடுதுறை

9.  காவிரிப்பூம் பட்டினத்தில் சங்கமமாவது ------------ ஆறு.

காவிரிப்பூம் பட்டினத்தில் சங்கமமாவது காவிரி ஆறு.

10.  காவிரியாறு ----------------- அருகில் தலைக்காவிரியில் தோன்றியது.

காவிரியாறு குடகு மலை அருகில் தலைக்காவிரியில் தோன்றியது.