10. குற்றாலம்

குற்றாலம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

மலைகள், அருவிகள், கடல்கள் இவை எல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள். இவற்றை நாம் கண்டு மகிழலாம்; இவற்றின் மூலம் பயன்பெறலாம். இயற்கை தரும் அழகை, பயனை நாம் பெறுவதோடு மட்டும் இல்லாமல் உலகமும் பெற வேண்டும். “யான் பெற்ற இன்பம் உலகமும் பெற வேண்டும்” என்ற நல்மொழிக்கு ஏற்ப இந்தப் பாடம் இயற்கை தரும் அழகை, பயனை உலகிற்குக் காட்டுகின்றது.