குற்றாலம்
பயிற்சி - 4
Exercise 4
1. குற்றாலத்தில் உள்ள சிறப்புகள் யாவை?
குற்றாலம் தமிழ் வளர்த்த ஊர். அங்கு அருவிகள், மலைகள், காடுகள் எனப் பல இயற்கைக் கொடைகள் உள்ளன.
2. குற்றாலத்தில் கிடைக்கும் பொருட்கள் யாவை?
குற்றாலத்தில் பழங்களும், காய்களும், உணவுப் பொருட்களும், விளைபொருட்களும், மலர்களும் கிடைக்கின்றன..
3. சித்திர சபையின் சிறப்புகள் யாவை?
அழகிய மண்டபத்தில் நடராசர், சிவகாமி அம்மன், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சிவனின் பிற விளையாடல்கள் அரிய வகை மூலிகைகள் கொண்டு படங்களாக தீட்டப் பெற்றுள்ளன.
4. குற்றால நாதர் கோயிலில் உள்ள தெய்வங்கள் யாவை?
குற்றால நாதர் கோயிலில் உள்ள தெய்வங்கள் பராசக்தி, குற்றாலநாதர்.
5. உலகில் மூலிகைக் குளியில் உள்ள ஊர் எது?
உலகில் மூலிகைக் குளியல் உள்ள ஊர் குற்றாலம்.
6. குற்றாலத்திற்கு எப்போது வருவது நல்லது?
குற்றாலத்திற்கு சூன் மாதம் வருவது நல்லது.
7. குற்றாலத்தில் உள்ள அருவிகள் யாவை?
(1) ஐந்தருவி, (2) பழைய குற்றால அருவி, (3) புலி அருவி, (4) புது அருவி,(5) பேரருவி, (6) சிற்றருவி, (7) பழத்தோட்ட அருவி, (8) செண்பகடாவி அருவி, (9) தேனருவி.
8. மலை மீது உள்ள அருவிகள் யாவை?
செண்பகடாவி அருவி, தேனருவி
9. குற்றாலநாதர் கோயில் எவ்வடிவத்தில் அமைக்கப் பெற்றுள்ளது?
குற்றாலநாதர் கோயில் சங்கு வடிவத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
10. குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் யார்?
குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.