குற்றாலம்
பாட அறிமுகம்
Introduction to Lesson
குற்றாலம் என்ற இடத்தின் சிறப்புகளை ஒரு மின்னஞ்சல் வழியாக இந்தப் பாடம் விளக்குகிறது. குற்றாலம் அருவிகள் பல அமைந்த ஊராகும். அங்கு ஒரு கோயிலும், சித்திரசபை ஒன்றும் உண்டு. அவற்றின் தகவல்களை எல்லாம் இந்தப் பாடம் தர உள்ளது.
மின்னஞ்சலைத் தற்போது தமிழில் அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். மின்னஞ்சல் முகவரிகள் உள்ள இருவர் செய்திகளை அனுப்ப முடியும்; பெற முடியும். அவ்வகையில் குற்றாலத்தைப் பற்றிய தகவல்களை இப்பாடம் மின்னஞ்சல் முகவரி உள்ள மற்றொருவருக்கு அனுப்புகிறது.