10. குற்றாலம்

குற்றாலம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  குற்றாலம் ----------------- மாவட்டத்தில் உள்ளது.

குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

2.  ஓர் அழகான இயற்கைச் சிற்றூர் --------------.

ஓர் அழகான இயற்கைச் சிற்றூர் குற்றாலம்

3.  குற்றாலத்தில் ------------- வீசும்.

குற்றாலத்தில் சாரல் வீசும்.

4.  குற்றாலம் கோயில் ------------- வடிவில் உள்ளது.

குற்றாலம் கோயில் சங்கு வடிவில் உள்ளது.

5.  குற்றாலத்தில் விளையும் விளைபொருட்கள் சில ---------, --------.

குற்றாலத்தில் விளையும் விளைபொருட்கள் சில தேக்கு, சந்தனம்,

6.  குற்றாலத்தில் இரண்டாயிரம் அரியவகைச் செடிகள், பூக்கள், மரங்கள் உள்ளன என முதன் முதலில் கண்டறிந்தவர் -----------.

குற்றாலத்தில் இரண்டாயிரம் அரியவகைச் செடிகள், பூக்கள், மரங்கள் உள்ளன என முதன் முதலில் கண்டறிந்தவர் ஒயிட்டு

7.  குற்றாலத்தில் ----------- அம்மன் கோயில் உள்ளது.

குற்றாலத்தில் பராசக்தி அம்மன் கோயில் உள்ளது.

8.  குற்றாலநாதர் கோயிலில் உள்ள மரம்---------.

குற்றாலநாதர் கோயிலில் உள்ள மரம் குறும்பலா

9.  குற்றாலத்திற்கு ---------- மாதத்தில் செல்வது நல்லது.

குற்றாலத்திற்கு சூன் மாதத்தில் செல்வது நல்லது.

10.  குற்றாலம் இயற்கை தந்த -----------.

குற்றாலம் இயற்கை தந்த கொடை.