10. குற்றாலம்

குற்றாலம்

மையக்கருத்து
Central Idea


குற்றாலம் என்ற ஊர் தமிழோடும், அருவிகளோடும், இயற்கை வளங்களோடும் தொடர்புடைய ஊராகும். இந்த ஊரில் ஒன்பது அருவிகள் உள்ளன. சங்கு வடிவக் குற்றாலநாதர் கோயில் உள்ளது. நடனம் ஆடும் நடராசர் ஓவியமும் மற்ற ஓவியங்களும் கொண்ட சித்திரசபை உள்ளது. தமிழ்நாட்டின் பழமைச் சிறப்பிற்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும், இயற்கை வளத்திற்கும் எடுத்துக்காட்டான ஊர் குற்றாலம்.

Kutraalam is a place long-associated with Tamil, waterfalls and natural resources. There are nine falls here. There is a Temple in the shape of a conch dedicated to Kutraala Nathar. The painting of dancing - Natarajar, and many others are kept in the picture gallery there. For ancient, culture and nature’s wealth,Kutraalam is a famous Tourist place in Tamil Nadu.