முகப்பு |
தினை (ஏனல்) |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
72. குறிஞ்சி |
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து |
||
எல்லாரும் அறிய நோய் செய்தனவே- |
||
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் |
||
பரீஇ வித்திய ஏனல் |
||
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே! |
உரை | |
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார் |
82. குறிஞ்சி |
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
||
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
||
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
||
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
||
கொழுங் கொடி அவரை பூக்கும் |
||
அரும் பனி அற்சிரம் வாராதோரே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |
105. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
||
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
||
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
||
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
||
சூர் மலை நாடன் கேண்மை |
||
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
133. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
||
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
||
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
||
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
||
நலம் புதிது உண்ட புலம்பினானே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. |
உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
217. குறிஞ்சி |
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
||
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
||
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என |
||
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
||
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
||
ஐதேய் கம்ம யானே; |
||
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. |
உரை | |
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |
225. குறிஞ்சி |
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
||
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
||
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
||
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
||
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
||
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
||
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
335. குறிஞ்சி |
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் |
||
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் |
||
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து, |
||
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் |
||
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் |
||
வல் விற் கானவர் தங்கைப் |
||
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. |
உரை | |
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன் |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. |
உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
357. குறிஞ்சி |
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
||
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
||
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
||
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
||
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
||
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
||
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
||
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
உரை | |
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
375. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-இன்று அவர் |
||
வாரார் ஆயினோ நன்றே-சாரல் |
||
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து |
||
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை |
||
பானாள் யாமத்தும் கறங்கும். |
||
யாமம் காவலர் அவியாமாறே. |
உரை | |
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது. |
392. குறிஞ்சி |
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
||
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
||
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
||
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
||
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
||
தமரின் தீராள் என்மோ-அரசர் |
||
நிரை செலல் நுண் தோல் போலப் |
||
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! |
உரை | |
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |
394. குறிஞ்சி |
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
||
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
||
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
||
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
||
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
||
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |