முகப்பு |
கிளி (கிள்ளை) |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
133. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
||
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
||
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
||
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
||
நலம் புதிது உண்ட புலம்பினானே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. |
உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
217. குறிஞ்சி |
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
||
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
||
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என |
||
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
||
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
||
ஐதேய் கம்ம யானே; |
||
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. |
உரை | |
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
333. குறிஞ்சி |
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
||
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
||
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
||
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
||
பணிக் குறை வருத்தம் வீட, |
||
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? |
உரை | |
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. |
உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
360. குறிஞ்சி |
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
||
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
||
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
||
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
சிலம்பின் சிலம்பும் சோலை |
||
இலங்கு மலை நாடன் இரவினானே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |